மிசிசாகாவில், (Mississauga) உந்துருளி மீது வாகனம் ஒன்று மோதிய விபத்தில், படுகாயமடைந்த ஒருவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
Queensway கிழக்கில், நேற்றிரவு 9.15 மணியளவில் இந்த விபத்து நேரிட்டதாக, பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், குறித்த பகுதியை தவிர்க்குமாறும், வாகன சாரதிகளிடம் காவல்துறையினர் கோரியுள்ளனர்.