சிறுபான்மை இன மற்றும் மதத்தினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று சிறிலங்காவிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முதன்மை பிரதிப் பேச்சாளர் ஜாலினா போர்ட்டர் (Jalina Porter) இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,
இன்றைய மனித உரிமை நிலைமைகள் மற்றும் எதிர்கால சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திலேயே சிறிலங்காவின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் சுபீட்சம் தங்கியுள்ளது.
சிறிலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பொறுப்பு கூறல்களை உறுதிப்படுத்தவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.