கனடியர்களுக்கான கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் எவ்விதமான தடங்கல்களும் ஏற்படாது என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்தார்.
சர்வதேச அளவில் கொரோனா தடுப்பூசிக்கு காணப்படும் மட்டுப்படுத்தப்படுத்தல்கள் கனடாவை ஒருபோதும் பாதிக்கமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் கன்சர்வேட்டிக் கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினரும் சுகாதார விமர்சகர் மைக்கேல் ரெம்பல் கார்னரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் கனடிய அரசாங்கம் தொடர்ச்சியாக தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.