ஐ.நா பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு தமக்கு இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள சிறிலங்கா அரசாங்க பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,
“ஜெனிவா தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அதிகாரம் இல்லை, தனிப்பட்ட நாடுகள் தொடர்பான முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும்.
அதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கலாம்.
அத்தகைய நடவடிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நாடாது என நம்புகிறேன்.
அவ்வாறு சமர்ப்பித்தால் ஐ.நா.பாதுகாப்பு சபை சிறிலங்கா குறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும் பாதுகாப்பு சபையில் உள்ள உறுப்பு நாடுகளின் பெரும்பான்மை ஆதரவு தமக்கு இருப்பதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.