மனிடோபா மற்றும் முதற்தர நாடுகளில் கொரோனா தடுப்பூசி விநியோகம் மற்றும், தடுப்பூசிகளைச் செலுத்தல் ஆகிய செயற்பாடுகளில் கனடிய படைகள் பங்கேற்றுள்ளன.
இந்தப் பகுதிகளில் காணப்படும் பொதுசுகாதார பரிசோதகர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவே கனடியப் படைகள் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
தற்போதைய நிலையில் மனிடோபா மற்றும் முதற்தர நாடுகளில் 65வயதக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாதடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த செயற்பாட்டை விரைவாக நிறைவுக்கு கொண்டுவருவதற்கு கனடியப் படைகளின் வகிபாகம் இன்றி அமையாயதது என்று அப்பகுதி நிருவாகத்தினர் குறிப்பிடுகின்றனர்.