கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மெய்நிகர் வழியில் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது ஐரோப்பிய பிராந்தியங்களுக்கு தேவையான தடுப்பூசிகளின் அளவு மற்றும் வறுமை நாடுகளுக்கான விநியோகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை இந்தியா, தனது தடுப்பூசியை மட்டுப்படுத்தியமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.