உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்காவை அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில், கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், பிரேசிலில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு முதல் முறையாக நாள் ஒன்றில் உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது.
இதுவரை, பிரேசிலில் 3 இலட்சத்து ஆயிரத்து 87 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், ஒரு கோடி 22 லட்சத்து 27 ஆயிரத்து 179 ஆக உயர்ந்துள்ளது.