பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான புரட்சி தலைவி ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதும், தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளன.
வயது மூப்பு மற்றும் கொரோனா பரவல் அச்சத்தால் மருத்துவர்கள் அறிவுரைக்கமைய அவர் கலைமாமணி விருது வழங்கும் விழாவுக்குச் சென்று விருதை பெற முடியவில்லை.
இந்தநிலையில் சுசீலாவின் இல்லத்திற்கே சென்று சிறப்பு கலைமாமணி விருதை இயல் இசை நாடக மன்ற அதிகாரி ஹேமநாதன் வழங்கி கௌரவித்துள்ளார்.
இந்த விருதை பெறும் முதலாவது இசை கலைஞர் என்ற பெருமை 85 வயதுடைய பாடகி சுசீலாவுக்குக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.