உயிரைக் கொடுத்தாவது அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசரத்தில் ஈடுபட்டார்.
இதன்போது, பல பொதுக்கூட்டங்களில் பேசி வருவதால் எனது தொண்டை சரியில்லை. உயிரை கொடுத்தாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
எந்த நேரத்திலும் தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார். அது அவரது இயலாமையைக் காண்பிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.