யாழ்ப்பாணம், நிலாவரை பகுதியில் சிறிலங்கா தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இன்று அகழ்வு நடவடிக்கையை முன்னெடுத்த போது, பெருமளவு மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு வெளியிட்டு, அந்த முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர், நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர், கடந்த மாதம் அகழ்வுப் பணியை முன்னெடுக்க முயன்றனர்.
அதற்கு பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் ஒன்று கூடி எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து, அந்த முயற்சி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை மீண்டும் தொல்பொருள் திணைக்களத்தினர் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த போது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் மற்றும் பொதுமக்கள் ஒன்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகளைக் கைவிட்டு, அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர்.