எகிப்தின் தென்பகுதியில் இரண்டு தொடருந்துகள் மோதிக் கொண்டதில், குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஷோஹாக் (Sohag) மாகாணத்தில், பயணிகள் தொடருந்தும், சரக்கு தொடருந்தும் ஒன்றின் மீது ஒன்று மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர் என்றும், 66 பேர் காயமடைந்தனர் என்றும் எகிப்தில் தொடருந்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இனந்தெரியாத நபர்கள் அவசரமாக தொடருந்தை நிறுத்த முயன்றதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தினால், தடம் புரண்ட தொடருந்து பெட்டிகள் கால்வாய் ஒன்றில் வீழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.