சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 54 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த புதனன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 54 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படையினர் கைது செய்தனர்.
ஐந்து மீன்பிடி படகுகளையும் அவர்கள் கைப்பற்றியிருந்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், தேர்தல் நேரத்தில் இந்திய அரசுக்ன நெருக்கடிகளையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் இந்தியா அரசின் அவசர நடவடிக்கைகளை அடுத்து, கைதான மீனவர்கள் அனைவரையும் சிறிலங்கா அரசு படகுகளுடன் விடுவித்துள்ளது.
இதையடுத்து, இராமேஸ்வரத்தை சேர்ந்த 20 மீனவர்கள், படகுகளுடன் சொந்த ஊரைச் சென்றடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.