வவுனியாவில் தாமரைப் பூ பறிப்பதற்காக குளத்தில் இறங்கிய ஆசிரியர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
வவுனியா – குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழாவிற்கு, தாமரைப்பூ பறிப்பதற்காக இன்று காலை வைரவபுளியங்குளம் குளத்திற்குள் இறங்கிய போதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளத்தில் இறங்கிய ஆசிரியரின் நடமாட்டதைக் காணாததை அடுத்து, அயலவர்கள் மற்றும் கமக்கார அமைப்பினர் இணைந்து தேடுதல் நடத்திய போது, நீரில் முழ்கிய நிலையில் ஆசிரியர் மீட்கப்பட்டுள்ளார்.
உடனடியாக வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இரசாயனவியல் பாடம் கற்பிக்கும் பரந்தாமன் என்ற ஆசிரியரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.