ரொறன்ரோ மிமிகோவில் (Mimico) வங்கிக் கொள்ளை முயற்சி ஒன்றை முறியடிக்கும் நடவடிக்கையின் போது, இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு 7.15 மணியளவில், Allen Avenue பகுதியில் உள்ள TD வங்கிக்குள் கத்திகளுடன் புகுந்த இரண்டு சந்தேக நபர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த வேளையில் வேறொரு கடமையில் ஈடுபட்டிருந்த சாதாரண உடையில் இருந்த இரண்டு காவல்துறையினர், அங்கு சென்று சந்தேக நபர்களை கைது செய்ய முயன்ற போது, இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, ஒரு காவல்துறை அதிகாரி கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். மற்றொருவர் சாதாரண வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வங்கிக்குள் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், மற்றையவர் தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.