அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநில சட்டசபைகளுக்கான தேர்தலில், முதற்கட்ட வாக்களிப்பு முடிவடைந்துள்ளது.
அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
மேற்கு வங்காளத்தில், மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களுக்கும், இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்.
மாலை 6 மணிக்கு வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அசாமில் 72.14 வீதமும், மேற்குவங்கத்தில் 79.79 வீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.