மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை மறுதினம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, முன்னர் போன்று பழைய விருப்பு வாக்கு முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதா? அல்லது புதிய தொகுதி முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னன்கோனினால், இதற்கான 2 மாற்று யோசனைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர்கள் சிலர் அறிவித்திருந்தனர்.
எனவே, குறித்த அமைச்சரவை பத்திரத்தை, கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை ஒரு வாரம் பிற்போடப்பட்டது.
இந்தநிலையில், அந்த அமைச்சரவை பத்திரம் நாளைமறுதினம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.