தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து ஆபாசமாக பேசிய தி.மு.க. துணைப்பொதுச்செயலர் ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது
தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வரின் தாய் குறித்து, தி.மு.க.வின் துணை பொதுச் செயலர் ஆ.ராசா தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தநிலையில், ஆ.ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கலகம் செய்ய தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், தேர்தல் விதிமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.