ஒன்ராறியோவில், இரண்டு மாதங்களுக்குப் பின்னர், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஒன்ராறியோவில், நேற்று 2 ஆயிரத்து 453 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 16 மரணங்களும் பதிவாகியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம், 22ஆம் நாள், 2 ஆயிரத்து 662 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நேற்றைய தினமே அதிகளவு தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ரொறன்ரோவில் 814 பேரும், பீல் பகுதியில், 411 பேரும், யோர்க் பிராந்தியத்தில் 263 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர் என்றும், சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.