வடக்கு வன்கூவர் (North Vancouver) பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில், பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 1.45 மணியளவில், Lynn Valley நூலகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நின்றவர்கள் மீதே கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து குற்றப் பின்னணி கொண்ட ஒருவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கைது செய்யப்பட்ட நபர் பற்றிய விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை.
இது ஒரு குழப்பமான, கொடூரமான சம்பவம் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளன