கனடாவில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அதனை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு போதுமையானவையாக இல்லை என்று பொதுசுகாதாரத்துறையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் தெரேசா டாம் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாகாணங்களும் தமது பொருளாதார மீள் எழுச்சியை எதிர்பார்த்து திறப்புக்களைச் செய்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் வெளியிடங்களில் நடமாடுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது மிகவும் நெருக்கடியானதொரு விடயமாக மாறியுள்ளது என்றும் அவா கூறினார்.