பிலிப்பின்ஸில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, தலைநகர் மணிலாவில் மீண்டும் ஊரடங்குச் சட்டம், அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மணிலா மற்றும் நகரைச் சுற்றியுள்ள மாகாணங்களிலும் இந்தக் கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றன.
இந்தப் பொது முடக்கத்தின்போது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.
பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள மணிலாவிலும் ஏனைய மாகாணங்களிலும் சமூக தனிமைப்படுத்தல் தீவிரப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.