ஒன்றாரியோவில் இரண்டு பிராந்தியங்கள் புதிய நிற மண்டலங்களுக்குள் நுழைகின்றன.
ஹமில்டன் பொது சுகாதார சேவைகள் நகரம் சாம்பல் நிற பூட்டுதல் மண்டலத்திற்கும் கிழக்கு ஒன்றாரியோ சுகாதாரப் பிரிவு சிவப்பு நிற கட்டுப்பாட்டு மண்டலத்திற்கும் நகரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மதியம் 12:01 மணிக்கு இந்த புதிய மண்டல அமுலாக்கம் செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, டிமிஸ்கேமிங் சுகாதாரப் பிரிவு சிவப்புக் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் நுழைந்துள்ள மை குறிப்பிடத்தக்கது.