மியான்மார் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பான உலகின் முக்கியமான இராணுவத் தளபதிகளுடன் இணைந்து கனடிய இராணுவத் தளபதியும், கூட்டு கண்டன அறிக்கையை வெளியிடவுள்ளார்.
மியான்மாரின் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் நேற்று மட்டும் 114 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, உலகின் முக்கியமான இராணுவத் தளபதிகள் 12 பேர் கூட்டாக கண்டன அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளனர்.
அவுஸ்ரேலியா, டென்மார்க், ஜேர்மனி, கிறீஸ், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, தென்கொரியா, பிரித்தானியா, அமெரிக்கா, ஆகிய நாடுகளின் தளபதிகளுடன், கனடிய இராணுவத் தளபதியும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்.
உலகின் முக்கியமான நாடுகளின் இராணுவத் தளபதிகள் இவ்வாறு கூட்டாக அறிக்கை வெளியிடுவது அரிதான நிகழ்வு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன