ரொறன்ரோ பியார்சன் (Pearson) சர்வதேச வானூர்தி நிலையத்தில், முஸ்லிம்களின் வழிபாட்டு பகுதி சேதமாக்கப்பட்ட சம்பவம் குறித்து பீல் பிராந்திய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வானூர்தி நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் உள்ள பல்சமய பிரார்த்தனைப் பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வெறுப்புணர்வுக் குற்றச் செயல் தொடர்பாக, வானூர்தி நிலைய அதிகாரிகள், காவல்துறையினருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வானூர்தி நிலைய நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.