இந்தியப் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பங்களாதேசில் நடத்தப்பட்ட போராட்டங்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியப் பிரதமர் மோடியின் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பங்களாதேசில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
வெள்ளிக்கிழமை தொடக்கம், பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டி, வன்முறைகளிலும் ஈடுபட்டனர்.
பேருந்துகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் தீ வைத்த போராட்டக் காரர்கள், இந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
பிரம்மன்பரியாவில் ரயில் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 10 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
போராட்டக்கார்களை கலைக்க காவல்துறையினர். தடியடி, கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியதுடன், துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.
இதில் 11 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.