அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அன்கரேஜில் (Anchorage) உள்ள பனி மலையில் உலங்கு வானூர்தி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரான செக் குடியரசை சேர்ந்த பெட்ர் கெல்னர் (Petr Kellner) உட்பட 3 சுற்றுலா பயணிகள், உலங்குவானூர்தியில், பனிமலைகளை சுற்றிப் பார்ப்பதற்காக புறப்பட்டு சென்ற போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உலங்குவானூர்தி பனிப்பாறை மீது மோதி நொருங்கியதாகவும், இந்த விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்த கெல்னர் (Petr Kellner) 2020ம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் உலகின் 68 ஆவது பணக்காரராக இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.