ஐ.நா. மனித உரிமைபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறிலங்கா அரசை அச்சம் கொள்ளவைத்துள்ளமையே புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைக்கு காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழ்மக்கள், மீதும் புலம்பெயர் அமைப்புக்கள் மீதும் கடும்போக்கான, இனவாத செயற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.
அதன்மூலம் ஐ.நா மனித உரிமைபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசை அச்சம் கொள்ளவைத்துள்ளதாகவே கருதமுடியும்.
எனினும் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு தீர்வு கிடைக்கும் என்பது எனது நம்பிக்கையில்லை. எனினும் பலம்பொருந்திய உலகநாடுகள் தமிழர்கள் தொடர்பாக கரிசனையுடன் இருப்பது அதன்மூலம் வெளிப்படுகின்றது.
நான் வெளிவிவகார அமைச்சருடன் தனிப்பட்டரீதியில் கலந்துரையாடியிருந்தேன். ஐ.நா பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மனதளவில் அரசுக்கு இணக்கம் ஏற்பட்டிருக்கின்றது.
சிங்கள மக்கள் மத்தியில் இனவாத ரீதியான தோற்றப்பாட்டை ஏற்ப்படுத்தினாலும், மனித உரிமைகள் பேரவையை மீறி அவர்களால் செயற்ப்படமுடியாது.
அந்த தீர்மானத்தை இங்கு நடைமுறைப்படுத்த முடியாது என்று அவர்கள் செயற்பட்டால் சிறிலங்கா மேலும் பாதிப்பையே நோக்கும் என்று கூறினார்