தமிழகத்தை காப்பாற்றுகின்ற தேர்தலாக இந்த தேர்தலை கருத வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தலை ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக கருதாமல் இழந்த உரிமைகளை மீட்டு எடுக்க வேண்டிய தேர்தலாக கருத வேண்டும்.
தமிழகத்திற்கான நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. நிலுவைதொகை, கொரோனா நிவாரண தொகை போன்றவற்றை முழுமையாக வழங்கவில்லை
அகில இந்திய அளவில் பலமான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையேற்ற வேண்டும் அவர் மேலும் தெரிவித்தார்.