எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட பிரம்மாண்ட ‘எவர் கீரின்’ (EVER GREEN) கப்பல் மீட்கப்பட்டுள்ளது.
தாய்வானைச் சேர்ந்த ‘எவர் கிரீன் மெரைன்’ (EVERGREEN marine) என்ற நிறுவனம் இயக்கிவரும் ‘எவர் கிவன்’ என்ற சரக்குக் கப்பல் கடந்த வாரம் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டது.
ஒருவாரம் மேற்கொண்ட மீட்புப் பணியின் விளைவாக எவர் கீரின் (EVER GREEN) கப்பல் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்ட இந்தக் கப்பலானது சில மணிநேரங்களில் கடற்பயண வழித்தடத்தில் நிறுத்தப்பட்டதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து இன்னமும் சில மணிநேரத்தில் தனது பயணத்தினை ஆரம்பிக்கும் என்று பி.பி.சி.குறிப்பிட்டுள்ளது.