அடையாளம் காணப்பட்டாத தொற்றாளர் மூலம், நாட்டில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து உள்ளதாக, சிறிலங்காவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதானது, நாட்டின் ஒட்டுமொத்த தொற்றுப் பரவல் நிலைமையைப் பிரதிபலிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்டாத தொற்றாளர் மூலம், நாட்டில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் சாத்தியம் உள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் தற்போது கண்டுபிடிக்கப்படும் தொற்றாளர்களே அதற்கு சான்று எனவும் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்றாவிட்டால், நாடு பாரிய ஆபத்தான நிலையை எதிர்கொள்ளக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.