கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியினை அபிவிருத்தியடைந்த நாடுகள் ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரஸ் (Antonio Guterres) கோரியுள்ளார்.
கனேடிய செய்தி ஸ்தாபனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
தமக்கு சார்பான நாடுகளுக்கு மட்டுமே தடுப்பூசியினை விநியோகிக்காமல் ஏனைய நாடுகளுக்கும், வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலமே, கொரோனா வைரஸ் தொற்றினை உலகளாவிய ரீதியாக கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்