தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீடிப்பு தொடர்பான அறிவிப்பு, நாளை வெளியாக உள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, கடந்த ஆண்டு மார்ச், 25ஆம் நாள் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும், நீடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகின்ற நிலையில், கொரோனா பரவல், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்ற போதும், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர்.
தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என, தெரிவிக்கப்படுகிறது.





