அம்பாறை மாவட்டம் பொத்துவில், சங்குமண்கண்டி கிராமத்தில் உள்ள தமிழ்மக்களின் மயானத்துக்குள், புத்தர் சிலையை அமைக்க பௌத்த பிக்குகள் மேற்கொண்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பொத்துவில், முகுது மகாவிகாரையின் விகாராதிபதி தலைமையிலான குழுவினர், சங்குமண்கண்டி பகுதியில் புத்தர்சிலை அமைப்பதற்காக சீமெந்து தூண்கள் உள்ளிட்ட பொருட்களுடன் வந்திறங்கியுள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள், ஒன்றுகூடி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தமது மயானத்துக்குள் விகாரை அமைக்கும் முயற்சிகளை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதற்கு பௌத்த பிக்குகள், குறித்த பகுதி வன இலாகாவினால் அடையாளப்படுத்தப்பட்டவை என்றும், அதனால் தாங்கள் அங்கு புத்தர் சிலை வைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் வன இலாகாவினால் எல்லையிடப்பட்டுள்ள காணிகள் தமிழ் மக்களுக்குச் சொந்தமானவை என்றும், தமிழ் மக்கள் வாழும் அந்தப் பகுதியில குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து பௌத்த பிக்குகள் புத்தர் சிலை அமைக்க எடுத்து வந்த பொருட்களுடன் திரும்பிச் சென்றுள்ளனர்.