மொசாம்பிக்கில், வெளிநாட்டவர்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளது.
சுமார் 50 வெளிநாட்டவர்கள், ஐஎஸ் பயங்கரவாதிகளால், தலை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
விடுதி ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 17 வாகனங்களில், வெளியேறிய போது, அவர்கள் மீது ஐ.எஸ் அமைப்பு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இதனையடுத்து பலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் அவர்களைக் கொடூரமாக கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மொசாம்பிக்கில், 53 ஆயிரம் பேர், வசிக்கும் முக்கியமான சுரங்க நகரம் ஒன்றை, சுமார் 100 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தப் பகுதியில் இருந்து சுமார் 1,400 பேர் படகு மூலம் மீட்கப்பட்டதாகவும், கூறப்படுகிறது.