சஸ்கட்சுவான் Saskatchewan நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பல வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்கரியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சப்ளினுக்கு Chaplin மேற்கே திங்கட்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில், இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் பயணம் செய்த பயணிகள் வாகனம் ஒன்றுடன் அரை பாரஊர்தி ஒன்று மோதியதை அடுத்து அடுத்தடுத்து பல விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் மூன்று அரை பாரஊர்திகள், பாரஊர்தி ஒன்று மற்றும் ஒரு வாகனம் என, மொத்தம், 7 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
இந்த விபத்தில் அரை பாரஊர்தி சாரதியான 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார் என்றும், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.