பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மத அல்லது இன அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க, மேலதிக தேர்தல் ஆணையாளர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அரசியலமைப்புகளில் மத அல்லது இன விடயங்கள் தொடர்பான உட்பிரிவுகள் அடங்கியுள்ளனவா என்பதை இந்தக் குழு ஆராயும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குழுவின் பணியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் ஆணையத்தின் மற்றொரு உறுப்பினர் ஆகியோர் மேற்பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளை இலக்கு வைத்தே சிறிலங்காவின் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.