கியூபெக்கில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து, மாகாண தலைநகர் உள்ளிட்ட மூன்று நகரங்கள் இன்று தொடக்கம் முடக்க நிலைக்குச் செல்வதாக, மாகாண முதல்வர் பிராங்கோயிஸ் லெகோல்ட் (Francois Legault) அறிவித்துள்ளார்.
இதையடுத்து, Quebec City, Levis மற்றும் Gatineau ஆகிய நகரங்களில் பாடசாலைகள் மற்றும் அவசியமற்ற வர்த்தகங்கள் மூடப்படுகின்றன.
முன்னர் 9.30 மணி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு, 8 மணிக்கு முன்நகர்த்தப்பட்டுள்ளது.
இந்த முடக்க நிலை 10 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Quebec Cityயில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 48 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.