வவுனியா உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் நுழைந்த முஸ்லிம் இளைஞன் ஒருவர் நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு தேவாலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞன் ஒருவர் தேவாலயத்தினுள் சென்றுள்ளார்.
அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை விசாரித்த போது 25 வயதுடைய கண்டி அக்குரனை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.