ஸ்காபரோ சுகாதார வலையமைப்பாலும் சமூக பங்காளிகளாளும் ஒழுங்கமைக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் நாள் புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 9 மணி வரை ஸ்காபரோ கன்வன்ஷன் சென்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை வெளியிட்ட ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் மேலும் தகவல் தருகையில்
மருத்துவர்கள் எலன் அம்பலவாணர், அருணா லம்போதரன், ராஜேஸ்வரி லோகநாதன், பொன் சிவாஜி, மயூரேந்திரா ரவிச்சந்திரன், மணிவண்ணன் செல்வநாதன், ஷிவானி ஸ்ரீதரன், கண்ணா வேலா ஆகியோர் இந்த முகாமில் கலந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள் என்றும்,
ஸ்காபரோவில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ஸ்காபரோவில் வாசிக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட, நாட்பட்ட நோய் உள்ளோர், ஸ்காபரோ மதத்தலைவர்களும் இந்த தடுப்பூசி முகாமில் பயன் பெற முடியும் என்றும்,
மேலதிக விவரங்களை www.ScarbVaccine.ca என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் கூறினார்
முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு தான் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் எனவே அனைவரும் முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விஜய் தணிகாசலம் வேண்டுகோள் விடுத்தார்.