மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல்நீதிமன்ற தீர்ப்பாயத்தின் முன்பாக இன்று முன்வைக்கப்பட்ட பிணை மனு மீதான விசாரணையின் போதே, ரவி கரணாநாயக்க மற்றும் ஏழு பேரையும், 1 மில்லியன் ரூபா காசு பிணையில் விடுவிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள எட்டுப் பேரையும், வெளிநாட்டுப் பயணங்கணை மேற்கொள்வதற்கு மேல்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.