ஒன்ராறியோவில் நான்கு வாரங்களுக்கு உள்ளக மற்றும் வெளிப்புற உணவருந்தல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதற்கு உணவகங்களின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஒன்ராறியோவில் ஒரு மாத முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடக்க நிலையின் போது ஏனைய வர்த்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதும், உணவகங்களின் உள்ளக, வெளிப்புற உணவருந்தல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது நியாயமற்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
100 தொற்றாளர்கள் பதிவாகிய போது, முடக்கப்படாத நிலையில், 11 தொற்றாளர்கள் மட்டும் உள்ள போது முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது கேலிக்குரியது என இரண்டு உணவகங்களை நடத்தும் உரிமையாளர் ஒருவர் வெறுப்புடன் கூறியுள்ளார்.