ரொறன்ரோவில் காணாமல் போயிருந்த தமிழ் இளைஞன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
28 வயதுடைய ஹரிகரன் கோணேசநாதன் என்ற இளைஞன், நேற்று முன்தினம் பிற்பகல் Steeles Avenue West பகுதியில் காணாமல் போயிருந்தார் என்றும், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறும் ரொறன்ரோ காவல்துறையினர் உதவி கோரியிருந்தனர்.
எனினும், குறித்த இளைஞன் நேற்று நண்பகல் அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
காணாமல் போன இளைஞனைக் கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு ரொறன்ரோ காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.