மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை, குறித்த பாடசாலையின் அதிபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, 28 வயதுடைய தொண்டர் ஆசிரியை உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சந்தேக நபராக பாடசாலை அதிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நேற்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது பாடசாலை அதிபரை பிணையில் செல்வதற்கு, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, வாழைச்சேனை வாழைச்சேனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.