கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒன்பது இலட்சத்து 82ஆயிரத்து 116பேர் பாதிக்கப்பட்டுள்ள தோடு 22ஆயிரத்து 959பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 47ஆயிரத்து 864பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 704பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.