நெருக்கடியான தருணங்களில் பாகிஸ்தான் எப்போதும், உண்மையான நண்பனாக சிறிலங்காவுடன் நின்றது என, சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்- சிறிலங்கா இராணுவங்கள் இணைந்து நடத்திய 15 நாட்கள் கூட்டுப் பயிற்சியின் நிறைவிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கைகுலுக்கல் ஒத்திகை-1 என்ற பெயரிடப்பட்ட இந்தக் கூட்டுப் பயிற்சி அனுராதபுர சாலியபுர இராணுவ தளத்தில் இடம்பெற்று வந்தது.
தீவிரவாதத்துக்கு எதிரான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் இந்தக் கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
இதில், 41 பாகிஸ்தான் இராணுவத்தினரும், 44 சிறிலங்கா இராணுவத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கூட்டுப் பயிற்சியின் இறுதியில் உரையாற்றிய இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்காவுக்கு நெருக்கடி ஏற்பட்ட எல்லா தருணங்களிலும், இன்று வரை பாகிஸ்தான் உண்மையான நண்பனாகவே சிறிலங்காவுயுடன் இருந்து வருகிறது.
அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் சிறிலங்காவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது என்று தெரிவித்துள்ளார்.