பிரேஸிலுடனான எல்லையை தற்காலிகமாக மூடுவதாக பொலிவியா ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் (Louis Ars) அறிவித்துள்ளார்.
பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவருவதனால், இதன்படி இன்று முதல் அண்டை நாடான பிரேஸில் உடனான எல்லை தற்காலிகமாக மூடப்படுகிறது.
அத்துடன் ‘உயிர் பாதுகாப்பு, மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும் விதமாகவும், தொற்றுநோயின் கண்காணிப்பு நடவடிக்கைள், தொற்று பரவலைக் குறைக்கும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையாக பிரேஸிலுடனான எல்லையை தற்காலிகமாக மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.