மேற்கு வங்க மாநில சட்டமன்றத்துக்கான இரண்டாவது கட்டத் தேர்தலில் 80 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில், இன்று இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்துள்ளது.
மாலை 6 மணி வரையில், மேற்கு வங்கத்தில் 80.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, அசாமில் நடந்த இரண்டாவது கட்ட தேர்தலில் 73.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.