தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து இழிவாக பேசியதற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, பிரசாரம் செய்வதற்கு 48 மணி நேர தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது, ராசா, முதல்வர் பழனிசாமியின் தாய் குறித்து, இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையம், அவரிடம் விளக்கம் கோரியதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் தான் எதுவும் பேசவில்லை என்றும், தனது பேச்சு அரசியல் ரீதியாக திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்றும் ராசா பதிலளித்திருந்தார்.
இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு ராசா பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து ஆ.ராசா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.