முன்னாள் சென். மைக்கேல் கல்லூரி St. Michael’s College பாடசாலையின் முன்னாள் மாணவன் ஒருவர், ரொறன்ரோ காவல்துறை சேவைகள் சபைக்கு எதிராக, ஒரு மில்லியன் டொலர் இழப்பீடு கோரி, வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அலைபேசியில் கைப்பற்றப்பட்ட காணாளி ஒன்றில், மற்றொரு மாணவன் மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், தவறாக தன் மீது குற்றம்சாட்டப்பட்டதாக குறித்த மாணவன் தெரிவித்துள்ளார்.
அந்த தாக்குதலில், குறித்த மாணவன் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்றும், ஆனால் 2018 ஒக்டோபரில் தனியார் பாடசாலையில் அதேபோன்ற மற்றொரு பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்றும், அந்த மனுவில் கூறியுள்ளார்.
ரொறன்ரோ காவல்துறை அதிகாரிகள் ஆதாரமின்றி, முடிவுக்கு வந்து, கைது செய்து, பின்னர் விசாரணை செய்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஜனவரியில் விசாரணை செய்யப்பட்ட போது, தாம் அந்த பாலியல் தாக்குதலில் தொடர்புபடவில்லை என்று கூறிய போதும் தன் மீதான குற்றச்சாட்டை அவர்கள் விலக்கிக் கொள்ளவில்லை என்றும் குறித்த முன்னாள் மாணவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்ட குறித்த மாணவன், தன் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்திய ரொறன்ரோ காவல்துறையிடம், 1மில்லியன் டொலர் இழப்பீடு கோரியுள்ளார்.