கோவையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற பேரணியின் போது, வர்த்தக நிலையங்களின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உந்துருளி பேரணியில் சென்றவர்கள், அங்குள்ள வர்த்தக நிலையங்களை மூடுமாறு மிரட்டி, கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ஜ.க கொடி கட்டப்பட்ட தடிகளால்,வியாபாரிகள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், அமைதியாக நடக்கும் தேர்தல் பிரசாரங்களில், யோகி ஆதித்யநாத் வன்முறையைத் தூண்டி விட்டுள்ளதாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.